2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி வ. உ. சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று (07. 04. 2026) நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டியை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. அவர்கள் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்வு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.