அந்தியூர் தாலுாகாவுக்கு உட்பட்ட வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் வீஏஓ. , தமிழ்செல்வி, தாம்பூலத் தட்டில் தேர்தலுக்கான அழைப்பிதழ் வைத்து, கட்டாயம் வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் மக்களவைத் தேர்தல் திருவிழா அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஏப். 19, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடக்கிறது.
இந்நாளில் தங்கள் சுற்றும் சூழ வருகை தந்து தவறாமல் வாக்கினை பதிவு செய்து 100 சத வாக்குப்பதிவு நடத்தி உரிமையை நிலைநாட்டிட வேண்டுகிறோம் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.