பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில், மூன்றாம் வகுப்பு மாணவி கவிவர்ஷினி, மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் திருக்குறள் ஒப்புவித்தலில் முதலிடம் வென்றுள்ளார். அவருக்கு திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் திருவள்ளுவர் புகைப்படம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திமுக பொறுப்பாளர் கே. ஆர். நாகேஸ்வரன் சிறப்புரையாற்றினார். காவல் ஆய்வாளர் செந்தில்குமார், அரசு மருத்துவர் கவிதா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி