ஈரோடு: நெல் வயலை யானை சேதப்படுத்தியது

அந்தியூர் அடுத்த வட்டக்காடு மொழுக்கன் தோட்டத்தை சேர்ந்த விவசாயி பாக்கியம், 60; வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்தில், கரும்பு பயிரிட்டு வளர்த்து வருகிறார். காக்காயனுார் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண்யானை, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, கரும்பு காட்டில் புகுந்து மிதித்து சேதப்படுத்தியது. நாய்கள் குரைத்ததால், விவசாயி மகேஷ், 38; எழுந்து வந்து யானையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதேபோல், நேற்று இரவு, வனத்தை ஒட்டிய சுப்பிரமணியம் என்பவரின் நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் தேப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி