அந்தியூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, கிராமப்புற மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் சின்னமாற நாயக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி எம் ஆர் ராஜா என்கின்ற ராஜா கிருஷ்ணன், எஸ் எஸ் ரமணிதரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதிமுகவினரும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி