ஈரோடு மாவட்டம் சின்னத்தம்பி பாளையம் ஒன்றியத்தில் உள்ள தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள், கிராமப்புற விவசாய அனுபவப் பணி திட்டத்தின் கீழ் நேற்று ஒரு விவசாயியின் பண்ணையைப் பார்வையிட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும், இயற்கை விவசாயச் சான்று பெற்ற விவசாயி சின்னசாமி, மாணவிகளுக்கு வாழை உயிர் கரைசல் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கமளித்தார். மேலும், பயிர் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.