அந்தியூர்: மிரட்டி பணம் பறிக்கும் கட்சினர் மீது நடவடிக்கை

அந்தியூர் பகுதியில் செங்கல் உற்பத்திக்குத் தேவையான செம்மண் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடாசலம், தாசில்தார் இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்  பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களில், குறிப்பிட்ட நேரத்திற்குள் லாரிகளை டவுனுக்குள் அனுமதிக்க சப்-கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தொடர்புடைய செய்தி