அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு இன்று காலை 11 மணியளவில் காட்டு யானை ஒன்று வந்தது. சிறிது நேரம் அணையின் மேல் பகுதியில் நடந்து சென்ற யானை, பின்னர் அணையில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் சிறிது அச்சமடைந்தனர்.