அந்தியூர் அருகே சிறுவர்கள் மட்டுமே குண்டம் இறங்கிய திருவிழா

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செம்புலிச்சம்பாளையத்தில் இன்று (மே 20) குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே உடல் முழுவதும் திருநீறு பூசி, கையில் பிரம்பில் சுற்றிக்கொண்டு, 20 அடி நீள குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் மூலம் அவர்களுக்கு எந்த நோயும் வராது என்பது ஐதீகம். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து பெண்கள் சாமிக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி