ஈரோடு: கேரள லாட்டரி விற்ற 4 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கேரள மாநில லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக, மாவட்ட எஸ். பி சுஜாதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், கேரள மாநில லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லாட்டரி விற்பனையை தடுக்கும் வகையில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

அந்த வகையில், லாட்டரி விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு டீச்சர் காலனியில் பகுதியில் லாட்டரி விற்ற, வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சதாசிவம் ( 42), நாடார் மேட்டில் லாட்டரி விற்பனை செய்த டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த சிஜி ( 34) ஆகியோரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, சின்னியம்பாளையத்தில் கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட செட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்த லிங்கம் ( 54), உன்னம்பாலம்புதூரைச் சேர்ந்த செல்லமுத்து ( 37) ஆகிய இருவரையும் மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி