தொடர் திருட்டு 3-வது குற்றவாளி அதிரடி கைது

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தில் லட்சுமி கோவிலில் கடந்த மாதம் திருட முயற்சி செய்ததும் அதேபோல திகனாரை அடுத்த ஜோரக்காடு பகுதியில் உள்ள ரங்கநாதர் கோவிலில் உண்டியலை திருட முயற்சி செய்த சம்பவத்தில் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா அடிப்படையில் தாளவாடி போலீஸ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில் தாளவாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவண்ணா மற்றும் மகாதேவா என இரண்டு பேரை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர.
இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3-வது நபரை தாளவாடி காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் தலைமை காவலர் தனபால், சித்தார்த் தலைமையில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (27) என்பவரை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி