ஈரோடு: இடி மின்னலுடன் பலத்த மழை.. முறிந்து விழுந்த மரம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. இந்த நாள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று  (மார்ச் 12) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் வெயிலும் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது. பின்னர் 5 மணி முதல் தொடர்ந்து 40 நிமிடம் வரை மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். 

செந்னிமலையில் மாலை 4 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அந்தியூரில் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 30 நிமிடம் வரை பெய்தது. இதேபோல் தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், புதுப்பாளையம், மூலக்கடை, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரம் மழை கொட்டியது. 

சத்தியமங்கலத்தில் மாலை 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கி 35 நிமிடம் பலத்த மழை பெய்தது. ஆசனூர் தாளவாடி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

தொடர்புடைய செய்தி