பண்ணாரி செக்போஸ்டில் நடைபெற்ற வாகன சோதனையில் 3 மூட்டை பான்மசாலாக்களை போலீஸார் பறிமுதல் செய்து தப்பியோடி டிரைவரை தேடி வருகின்றனர். சத்தி அடுத்த பண்ணாரி செக்போஸ்ட் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலகள் தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் சத்தி எஸ். ஜ பரமேஸ்வரன் தலைமையிலான போலீஸார் பண்ணாரி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கர்நாடகமாநிலத்தில் இருந்து சத்திக்கு தக்காளி லோடு ஏற்றி வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேணில் இருந்த தக்காளி பாக்ஸ்களுக்கு மறைவில் இருந்த 3 சாக்கு மூட்டைகள் இருந்தது. இது பற்றி கேட்டதற்கு வாகன ஓட்டி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் மூட்டைகளை சோதனையிட்டதில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பான்பராக், ஹான்ஸ், கூலிப் பான்மாசல பாக்கெட்டுகள் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 29 அயிரத்து 960 ரூபாய் இருக்கலாம் எனவும், 3 மூட்டைகளில் இருந்த பான்மாசலக்களின எடை 75 கிலோ இருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த சோதனையின் போது வேணை ஓட்டி வந்த நபர் போலீஸாரிடம் இருந்து தப்பியோடியதால் போலீஸார் அவரை தேடிவருகின்றனர். இதையடுத்து போதை பாக்குகள் கடத்தி வந்த வேணை விசாரனைக்காக சத்தி ஸ்டேசனுக்கு போலீஸார் எடுத்து வந்த போலீஸார் தப்பியோடி நபர் குறித்து விசாரனை நடத்தியதில் தாளவாடி, திப்பு சர்கிளைச்சேர்ந்த அப்துல்ஹரிப் (33) என தெரியவந்தது. சத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசானை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு நகரம்
சத்ரிய சான்றோர் படைமாநில தலைவர் ஹரிநாடாருக்கு உற்சாகவரவேற்பு