அவரை பரிசோதித்த அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் செ. விஜய் மற்றும் பவளக்குட்டை துணை சுகாதார நிலைய செவிலியர். நிர்மலாதேவி உடனடியாக சத்தியமங்கலம் அரசு அண்ணா மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
108 ஆம்புலன்ஸ் கடம்பூர் வனப்பகுதி சோதனைசாவடி அடுத்த கெம்பநாயக்கன் பகுதியின் அருகே வந்தபோது செல்விக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மனோகர் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார் மருத்துவ நுட்புநர் செ. விஜய் மருத்துவ உபகரண உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது செல்வி தினேஷ் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக சத்தியமங்கலம் அரசு அண்ணா மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் செ. விஜய் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மனோகர் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் மற்றும் குத்தியாலத்துர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.