ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே காரில் மனைவியுடன் சென்றுகொண்டிருந்த ரவுடி ஜான் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். பச்சபாளி பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கார்த்திகேயன் என்பவர் கையில் காயத்துடன் பிடிபட்டுள்ளார். மேலும் கொலையில் தொடர்புடைய சதீஷ், சரவணன், பூபாலன் ஆகியோரை துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர். கொலையாளி தாக்கியதில் காயமடைந்த ஆய்வாளர் ரவி மற்றும் ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: தந்தி