ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரி மணிஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், “வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இதற்கான படிவங்களை வழங்கி வரும் 15ஆம் தேதிக்குள் ஒப்புதல் பெற உள்ளது. பின்னர், வீட்டுக்கே வந்து தபால் வாக்குகள் பெறப்படும், முன்னரே நேரம், தேதி ஆகியவை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.