ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்துள்ளது. மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி