பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் இஸ்ரேலிய உளவு அமைப்பிற்காக பணியாற்றினார் என்ற குற்றச்சாட்டுகளை அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு மறுத்துள்ளார். முன்னாள் பிரதமர் எஹுத் பராக்கின் பெயர் எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய கோப்புகளில் இடம்பெற்றதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அவர், இருவருக்கும் இடையே இருந்த தனிப்பட்ட நெருக்கம் அரசுடன் தொடர்புடையது அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.