சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இபிஎஸ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவ., 08) தனது 59 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமான் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி