அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 26) செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் ஆதரவு தரப்பு ஆதரவாளர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை பாயும் என்ற கடுமையான அச்சத்தின் காரணமாகவே ஏற்கனவே 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
நன்றி:பாலிமர்