சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக-வால் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக பல மாவட்டங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், வருகிற 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். திருவள்ளூரில் 5 நாட்களும், செங்கல்பட்டில் 26ஆம் தேதியும் பரப்புரை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: குமுதம்