தமிழ்நாட்டில், கோயில்கள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதன்படி காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, ஸ்ரீரங்கம், மதுரை, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அங்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடலாம் என தயாராகி வரும் நிலையில், புகழ்பெற்ற கோயில்கள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்பது இபிஎஸ்-ஐ அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.