அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்வர் ராஜா. இவர் தற்போது திமுகவின் இணைந்தார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் இபிஎஸ்-க்கு முதல்வர் வாய்ப்பில்லை. செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு முதல்வர் வாய்ப்பு இருக்கலாம். அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் என அமித்ஷா கூறினாரே தவிர இபிஎஸ் பெயரை அவர் சொல்லவில்லை. பாஜக கூட்டணி முதல்வராக, பாஜக சொல்வதை அப்படியே கேட்கும் ஒருவராகவே இருக்க முடியும்” என்றார்.