அதிமுகவில் லீமா ரோஸ்-க்கு பதவி வழங்கிய இபிஎஸ்

லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், ஐஜேகேவிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு அதிமுகவில் மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் எல்ஜேகே என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அதே போல் இவரது மகளின் கணவர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி