அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதிவில், "இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் , தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளில், எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.