அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை விமர்சித்துப் பேசியதற்கு, அமைச்சர் கே.என். நேரு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, “கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் கமலாலயம் புளியைக் கரைத்து வருகிறது . அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால் அடுத்த மே தினத்தில் இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுக பொதுச்செயலாளர் பதவியையும் இழந்து நிற்பார்” என்றார்.