திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகே இளம்பெண்ணை, காவலர்கள் பலாத்காரம் செய்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரு காவலர்கள், அப்பெண்ணின் சகோதரி கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பின்மை என்ற அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களால், பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் வைத்துள்ளார்?” என்றார்.