இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 2வது நாளான இன்று (ஆக.01) முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கருண் நாயர் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தொடங்குகிறது.