தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை கட் ஆப் குறைகிறது

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட 2 முதல் 4 மதிப்பெண் வரை குறையும் என கல்வி நிபுணர்கள் கணித்துள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம். மாணவர்கள் TNEA இணையதளத்தில் கடந்த ஆண்டுகளின் கட் ஆப் மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்து கல்லூரி விருப்பங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி