சென்னையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, தங்க நகை மற்றும் இரும்பு மொத்த வியாபாரம் செய்யும் தொழிலதிபர்கள் தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் இன்று (நவ., 20) அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தினர். சௌகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கே.கே. நகர், சைதாப்பேட்டை, அம்பத்தூர், கோடம்பாக்கம் என பல இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை.