தமிழகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் நாளை (நவ.17) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்பணியில் இருந்து அரசு ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தலைமை செயலாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். "பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.