காரை வாட்டர் சர்வீஸ் செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காரை வாட்டர் சர்வீஸ் செய்துகொண்டிருந்த ஊழியர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிதிகை பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில், சுதாகர் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், காரை தண்ணீர் மூலம் வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். பானட்டை திறந்து வாட்டர் சர்வீஸ் செய்தபோது திடீரென அதில் மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

நன்றி: @prtnsspprt

தொடர்புடைய செய்தி