சென்னையில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 278 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் அனைவரும் துபாய் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.