செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகன் சிலை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலின் பூட்டை உடைத்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கவிடப்பட்டுள்ளது.