அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் SpaceX-ன் CEO எலான் மஸ்க் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், டிரம்ப் இன்று (ஜூலை 1), "சலுகைகள் இல்லை என்றால் மஸ்க் கடையை காலி செய்துவிடுவார்" என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மஸ்க், "டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால், அடுத்த நாளே 'அமெரிக்கன் பார்ட்டி' என்ற கட்சியை தொடங்குவேன். அமெரிக்க மக்களுக்காக புதிய கட்சி மிகவும் அவசியம்" என பேசியுள்ளார்.