கோயம்புத்தூர் மாநகர சாலைகளில், எலான் மஸ்க் நிறுவனத்தின் டெஸ்லா சைபர் டிரக் முதன்முறையாக வலம் வந்தது. விண்வெளி ஓடம் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் ஆன இந்த வாகனம், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலானது. துப்பாக்கி தோட்டாக்களையும் தாங்கும் வல்லமை கொண்டது. இது இந்தியாவில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சென்னை, மும்பை போன்ற நகரங்களைத் தொடர்ந்து கோவையிலும் தென்பட்டது.