தண்ணீர் தொட்டியில் விழுந்த யானை உயிரிழப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் காருண்யா நகர் அருகே, 25 அடி தண்ணீர் தொட்டியில் விழுந்த ஆண் காட்டு யானை உயிரிழந்தது. தனியார் தோட்டத்திற்குள் அதிகாலை 3 மணியளவில் புகுந்த 10 வயது ஆண் காட்டு யானை, அங்கிருந்த கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், யானையின் உடலை பொக்லைன் வாகனம் மூலம் மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி