50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப்பட்டியல்: அமைச்சர் வினோத் அறிவிப்பு

வெளிப்படையான விற்பனை விலையை உறுதி செய்ய 50 உழவர் சந்தைகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் மின்னணு விலைப்பட்டியல்கள் அமைக்கப்படவுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். மேலும், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவற்றுடன் தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ரூ.9 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி