தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், 2022ஆம் ஆண்டு 30 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2023ஆம் ஆண்டு 2.18 சதவீதம், 2024ஆம் ஆண்டு 4.84 சதவீதம், 2025ஆம் ஆண்டில் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு மின்சாரக் கட்டணம் எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை. 2031-க்குள் மொத்த மின் உற்பத்தியில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும் என்று கூறினார்.