மின் இணைப்புக்கு ரூ.15,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியர் கைது

திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில், மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் கேட்ட மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியனை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (பிப்., 06) கைது செய்தனர். புது வீடு கட்டி வரும் ராகவன் என்பவர் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கு லஞ்சம் கேட்டதால், ராகவன் அளித்த புகாரின் பேரில், ரசாயனப் பவுடர் தடவிய பணத்தை பாலசுப்பிரமணியனிடம் கொடுத்தபோது அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி