மின்சார ரயில் சேவை மார்ச் 1ஆம் தேதி வரை ரத்து

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை, வரும் மார்ச் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல், பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி