2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்க நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, கோவையின் சிங்காநல்லூர் தொகுதியில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவை வடக்கு, திருப்பரங்குன்றத்தில் ராம ஸ்ரீநிவாசன் மற்றும் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி ஆகியோர் முதற்கட்ட பணிகளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி:News18