திமுகவின் தோல்விக்கான காரணங்கள், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.16) ஆலோசனை நடத்துகிறார். இந்த கள ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த குழு, தமிழ்நாடு முழுவதும் நாளை மறுதினம் (மே.18) முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுசெய்கிறது.
நன்றி: நியூஸ்18