லால்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் 7 நிறுவனங்களில் பங்குதாரராக உள்ள விவரங்களை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவரது வெற்றியை ரத்து செய்யக் கோரிய இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து லீமா ரோஸ் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
நன்றி: சன் நியூஸ்