எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை வாபஸ் பெறுவதாக தவெக வேட்பாளர் மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக-வில் இருந்து விலகி, தவெக-வில் இணைந்துள்ளதால், இந்த வழக்கு நடத்துவது குறித்து மனுதாரர் மதியழகனின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை.17) அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி