சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷியாமலா என்ற மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர் 2023ஆம் ஆண்டு முதல் வனவிலங்கு துறையிடம் அனுமதி பெறாமல், புறாக்களுக்கு உணவளித்து வந்ததாக தெரிகிறது. சிங்கப்பூரில் பறவை, விலங்குகளுக்கு உரிய அனுமதி பெற்ற பிறகு தான் உணவளிக்க வேண்டும். இதுகுறித்து அப்பெண்ணிடம் எச்சரித்தும், அவர் தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டதால் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.