கட்டுப்பாட்டை இழந்த லாரி, வீடு மீது மோதி மூதாட்டி பலி

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, வீடு மீது மோதி விபத்துக்குள்ளானது. வீட்டின் சுற்றுச்சுவர் அருகே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கங்கம்மாள் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். லாரி ஓட்டுநரைக் கைது செய்து பொன்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி