டீசல் லாரி மோதி மூதாட்டி பலி.. சடலத்தின் முன் டீசலை பிடிக்க ஓடிய பொதுமக்கள்

திருவண்ணாமலை அரசம்பட்டு பகுதியில் டீசல் லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் மூதாட்டியின் சடலம் கிடந்த நிலையில், அப்பகுதி மக்கள் டீசலை பிடிக்க முண்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடம், வாலி, தண்ணீர் கேன் உள்ளிட்டவற்றில் டீசலை பிடித்துச் சென்றனர். சாலையின் குறுக்கே மூதாட்டி வந்த நிலையில் அவர் மீது மோதிய டீசல் லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி