ஸ்ரீவில்லிபுத்தூரில் மலைப்பாம்புக்கு இரையான முதியவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து வந்த முதியவர் முத்தையா, காணாமல் போன மாட்டை தேடி வனப்பகுதிக்குச் சென்றபோது மலைப்பாம்புக்கு இரையாகி உயிரிழந்தார். குடும்பத்தினர் மற்றும் வனத்துறையினர் தேடியபோது, மலைப்பாம்பு சுற்றிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் மேய்ச்சலுக்குச் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி