துடிதுடித்து முதியவர் பலி.. போலி டாக்டர் கைது

திருவண்ணாமலையில் தவறான சிகிச்சையால் முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். போளூர் அருகே மகேஷ் என்ற மகேந்திரன், டிப்ளமோ லேப் டெக்னிஷியன் படித்துவிட்டு, 18 ஆண்டுகளாக போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அவரிடம் சிகிச்சைக்கு சென்ற விவசாயி கணேசனுக்கு, மகேஷ் மருத்துவம் பார்த்துள்ளார். ஊசி போட்டு ட்ரிப் ஏற்றிய போது, முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி